بِٱلْبَيِّنَٰتِ وَٱلزُّبُرِ وَأَنزَلْنَآ إِلَيْكَ ٱلذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅத்தாட்சிகளையும் வேதங்களையும் கொண்டு (அத்தூதர்களை அனுப்பினோம்). (இந்த) ஞானத்தை (நபியே!) உமக்கு இறக்கினோம். ஏனெனில், அம்மக்களுக்காக இறக்கப்பட்ட (இந்த ஞானத்)தை (நீர்)அவர்களுக்கு தெளிவுபடுத்துவீர், இன்னும் (அந்த ஞானத்தையும் நபியின் கூற்றையும்) அவர்கள் சிந்திக்க வேண்டும்! (அவ்விருவருக்கும் கட்டுப்பட வேண்டும்!)
Tamil Translation - Omar Sharifஅத்தாட்சிகளையும் வேதங்களையும் கொண்டு (அத்தூதர்களை அனுப்பினோம்). (இந்த) ஞானத்தை (நபியே!) உமக்கு இறக்கினோம், அம்மக்களுக்காக இறக்கப்பட்ட (இந்த ஞானத்)தை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும்; (அந்த ஞானத்தையும் நபியின் விளக்கத்தையும்) அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும்!
Tamil Translation - Abdulhamid Baqawi44. அத்தூதர்களுக்கும் தெளிவான அத்தாட்சிகளையும், வேதங்களையும் (கொடுத்து அனுப்பினோம்). அப்படியே இந்தக் குர்ஆனையும் (நபியே!) நாம் உமக்கு இறக்கி வைத்தோம். மனிதர்களுக்காக (உம்மீது) இறக்கப்பட்ட இதை நீர் அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிப்பீராக. (இதன் மூலம்) அவர்கள் கவனித்தறிந்து கொள்வார்கள்.