وَعَلَى ٱلَّذِينَ هَادُوا۟ حَرَّمْنَا مَا قَصَصْنَا عَلَيْكَ مِن قَبْلُ وَمَا ظَلَمْنَٰهُمْ وَلَٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) இதற்கு முன்னர் (6ம் அத்தியாயம் 146ம் வசனத்தில்) நாம் உம்மீது விவரித்தவற்றை யூதர்களாக இருப்பவர்கள் மீது (ஹராம் என்று) தடுத்தோம். நாம் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்கு (தாங்களே) தீங்கிழைப்பவர்களாக இருந்தனர்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) இதற்கு முன்னர் (ம் அத்தியாயம் ம் வசனத்தில்) நாம் உம்மீது விவரித்தவற்றை யூதர்கள் மீது (ஹராம் என்று) தடுத்தோம். நாம் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை. எனினும், அவர்கள்தான் தங்களுக்குத் தாமே தீங்கிழைப்பவர்களாக இருந்தனர்.
Tamil Translation - Abdulhamid Baqawi118. (நபியே!) இதற்கு முன்னர் (6ம் அத்தியாயம் 146ம் வசனத்தில்) நாம் உங்களுக்கு விவரித்தவற்றை யூதர்களுக்குத் தடுத்துவிட்டோம். (எனினும்) நாமாகவே (அதைத் தடுத்து) அவர்களுக்குத் தீங்கிழைத்து விடவில்லை. எனினும், அவர்கள் (தாமாகவே அவற்றைத் தடுத்துக்கொண்டு) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.