caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nahl அத்தியாயம், வசனம் 119

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 70 · 16:119

ثُمَّ إِنَّ رَبَّكَ لِلَّذِينَ عَمِلُوا۟ ٱلسُّوٓءَ بِجَهَٰلَةٍ ثُمَّ تَابُوا۟ مِنۢ بَعْدِ ذَٰلِكَ وَأَصْلَحُوٓا۟ إِنَّ رَبَّكَ مِنۢ بَعْدِهَا لَغَفُورٌ رَّحِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, நிச்சயமாக உம் இறைவன், எவர்கள் அறியாமையின் காரணமாக கெட்டதைச் செய்து, அதற்கு பின்னர் அதிலிருந்து விலகி திருந்தி மன்னிப்புக்கேட்டு, (தங்களை) சீர்படுத்தினார்களோ அவர்களுக்கு நிச்சயமாக உம் இறைவன் அ(வர்கள் திருந்திய)தற்குப் பின்பு (அவர்களை மன்னித்து கருணை காட்டும்) மகா மன்னிப்பாளன், மிகக் கருணையாளன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifபிறகு, (தூதரே!) நிச்சயமாக உம் இறைவன், - எவர்கள் அறியாமையின் காரணமாக கெட்டதைச் செய்து, அதற்கு பின்னர் அதிலிருந்து திருந்தி, மன்னிப்புக்கேட்டு, (தங்களை) சீர்படுத்தி கொண்டார்களோ அவர்களுக்கு நிச்சயமாக உம் இறைவன் அ(வர்கள் திருந்திய)தற்குப் பின்னர் (அவர்களை) மன்னிப்பவனாகவும் (அவர்கள் மீது) கருணைபுரிபவனாகவும் இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi119. (நபியே!) எவர்கள் தங்கள் அறியாமையினால் பாவத்தைச் செய்துவிட்டு, அறிந்த பின்னர் அதிலிருந்து விலகி நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களை; (அவர்கள் பாவத்திலிருந்து விலகி நற்செயல்களைச் செய்த) பின்னர் நிச்சயமாக உமது இறைவன் மிக்க மன்னித்து, மிகக் கருணை காட்டுவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70