فَكُلُوا۟ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ حَلَٰلًا طَيِّبًا وَٱشْكُرُوا۟ نِعْمَتَ ٱللَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் ஆகுமான நல்லதை புசியுங்கள், அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துங்கள், நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருந்தால்.
Tamil Translation - Omar Sharifஆக, (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் ஆகுமானதை, நல்லதை புசியுங்கள்! மேலும், அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துங்கள்! நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருந்தால்.
Tamil Translation - Abdulhamid Baqawi114. (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் ஆகுமான நல்லவற்றையே புசியுங்கள். நீங்கள் அல்லாஹ்வை வணங்குபவர்களாக இருந்தால், அவனுடைய அருட்கொடைகளுக்கு நீங்கள் நன்றி செலுத்தி வாருங்கள்.