وَلَقَدْ جَآءَهُمْ رَسُولٌ مِّنْهُمْ فَكَذَّبُوهُ فَأَخَذَهُمُ ٱلْعَذَابُ وَهُمْ ظَٰلِمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களிலிருந்தே ஒரு தூதர் திட்டவட்டமாக அவர்களிடம் வந்தார். அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்கள் அநியாயக்காரர்களாக இருக்கின்ற நிலையில் அவர்களை வேதனைப் பிடித்தது.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்களிலிருந்தே ஒரு தூதர் திட்டவட்டமாக அவர்களிடம் வந்தார். ஆக, அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்கள் அநியாயக்காரர்களாக இருக்கின்ற நிலையில் அவர்களை (அல்லாஹ்வின்) தண்டனைப் பிடித்தது.
Tamil Translation - Abdulhamid Baqawi113. (நபியே!) அவர்களிலிருந்தே (நாம் அனுப்பிய நம்) தூதரும் அவர்களிடம் வந்தார். எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி விட்டார்கள். ஆகவே, (இவ்வாறு) அவர்கள் அநியாயக்காரர்களாக இருக்கும் நிலைமையில் அவர்களை வேதனைப் பிடித்துக் கொண்டது.