caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nahl அத்தியாயம், வசனம் 11

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 70 · 16:11

يُنۢبِتُ لَكُم بِهِ ٱلزَّرْعَ وَٱلزَّيْتُونَ وَٱلنَّخِيلَ وَٱلْأَعْنَٰبَ وَمِن كُلِّ ٱلثَّمَرَٰتِ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதைக் கொண்டு பயிர்களையும், ஸைத்தூன், பேரீச்சை மரம், திராட்சைகள் இன்னும் எல்லா கனிவர்க்கங்களி(ன் மரங்களி)லிருந்தும் அவன் உங்களுக்கு முளைக்க வைக்கிறான். நிச்சயமாக சிந்திக்கின்ற மக்களுக்கு இவற்றில் ஓர் அத்தாட்சி இருக்கின்றது.
Tamil Translation - Omar Sharifஅதன் மூலம் பயிர்களையும், ஆலிவ் மரத்தையும், பேரீச்சை மரங்களையும், திராட்சைகளையும் இன்னும், எல்லா கனிவர்க்கங்களையும் அவன் உங்களுக்காக முளைக்க வைக்கிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi11. அதைக் கொண்டே விவசாயப் பயிர்களையும், ஜைத்தூன், பேரீச்சை, திராட்சை ஆகிய எல்லா கனிவர்க்கங்களையும் அவன் உங்களுக்கு உற்பத்தி செய்கிறான். நிச்சயமாக இதில் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70