caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hijr அத்தியாயம், வசனம் 3

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 54 · 15:3

ذَرْهُمْ يَأْكُلُوا۟ وَيَتَمَتَّعُوا۟ وَيُلْهِهِمُ ٱلْأَمَلُ فَسَوْفَ يَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) அவர்களை விடுவீராக! அவர்கள் புசிக்கட்டும், இன்னும் அவர்கள் சுகம் அனுபவிக்கட்டும். அவர்களுடைய ஆசை அவர்களை மறக்கடிக்கட்டும். பின்னர் (அவர்கள் தங்களது கெட்ட முடிவை) அறிவார்கள்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) அவர்களை விடுவீராக! அவர்கள் உண்ணட்டும்; இன்னும், அவர்கள் சுகம் அனுபவிக்கட்டும்; மேலும். அவர்களுடைய ஆசைகள் (மறுமையை விட்டும்) அவர்களை திசை திருப்பட்டும். ஆக, (அவர்கள் தங்களது கெட்ட முடிவை) விரைவில் அறிவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi3. (நபியே!) அவர்கள் (நன்கு) புசித்துக்கொண்டும், (தங்கள் இஷ்டப்படி) சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க (தற்சமயம்) நீர் அவர்களை விட்டுவிடுவீராக. அவர்களுடைய (வீண்) நம்பிக்கைகள் (மறுமையை அவர்களுக்கு) மறக்கடித்து விட்டன. இதன் (பலனை) பின்னர் அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70