caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ar-Ra'd அத்தியாயம், வசனம் 42

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 96 · 13:42

وَقَدْ مَكَرَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ فَلِلَّهِ ٱلْمَكْرُ جَمِيعًا يَعْلَمُ مَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ وَسَيَعْلَمُ ٱلْكُفَّٰرُ لِمَنْ عُقْبَى ٱلدَّارِ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (தூதர்களுக்கு எதிராக) திட்டமாக சூழ்ச்சி செய்தனர். சூழ்ச்சி அனைத்தும் அல்லாஹ்விற்கே. (அவன் நாடியதே நடக்கும்.) ஒவ்வொரு ஆன்மாவும் செய்வதை அவன் அறிவான். ஆகவே, எவருக்கு மறுமையின் (நல்ல) முடிவு உண்டு என்பதை நிராகரிப்பவர்கள் (விரைவில்) அறிவார்கள்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (தூதர்களுக்கு எதிராக) திட்டமாக சூழ்ச்சி செய்தனர். ஆக, (நிறைவேறுகின்ற) சூழ்ச்சி அனைத்தும் அல்லாஹ்விற்கே உரியதாகும். (அவனது சூழ்ச்சிதான் நிறைவேறும்.) ஒவ்வோர் ஆன்மாவும் செய்வதை அவன் நன்கறிவான். மேலும், எவருக்கு மறுமையின் அழகிய முடிவு உண்டு என்பதை நிராகரிப்பவர்கள் விரைவில் அறிவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi42. (நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (நம் தூதர்களுக்கு விரோதமாக இவ்வாறே) பல சூழ்ச்சிகளைச் செய்து கொண்டிருந்தனர். எனினும், சூழ்ச்சிகள் அனைத்தும் அல்லாஹ்விடம் சிக்கிவிடும். (ஏனென்றால்,) ஒவ்வோர் ஆத்மாவும் செய்கின்ற (சூழ்ச்சிகள்) அனைத்தையும் அவன் (திட்டமாக) நன்கறிகிறான். ஆகவே, எவர்களுடைய காரியம் நன்மையாக முடியும் என்பதை இந்நிராகரிப்பவர்கள் அதி சீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70