أَوَلَمْ يَرَوْا۟ أَنَّا نَأْتِى ٱلْأَرْضَ نَنقُصُهَا مِنْ أَطْرَافِهَا وَٱللَّهُ يَحْكُمُ لَا مُعَقِّبَ لِحُكْمِهِۦ وَهُوَ سَرِيعُ ٱلْحِسَابِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நாம் (அவர்கள் வசிக்கின்ற) பூமியை அதன் ஓரங்களிலிருந்து குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிக்கிறான் (அதிகாரம் செலுத்துகிறான்). அவனுடைய தீர்ப்பைத் தடுப்பவர் அறவே இல்லை. அவன் விசாரிப்பதில் மிக தீவிரமானவன்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக நாம் (அவர்கள் வசிக்கின்ற) பூமியை அதன் ஓரங்களிலிருந்து குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ் (தனது அடியார்களுக்கு மத்தியில்) தீர்ப்பளிக்கிறான். அவனுடைய தீர்ப்பைத் தடுப்பவர் யாரும் அறவே இல்லை. மேலும், அவன் (முன்னோர், பின்னோரை) விசாரிப்பதில் மிக தீவிரமானவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi41. (அவர்கள் வசித்திருக்கும்) பூமியை அதன் ஓரங்களிலிருந்து நிச்சயமாக நாம் (படிப்படியாகக்) குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிக்கக்கூடியவன். அவனுடைய தீர்ப்பைத் தடை செய்யக்கூடியவன் ஒருவனுமில்லை. அவன் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகத் தீவிரமானவன்.