وَيَقُولُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَسْتَ مُرْسَلًا قُلْ كَفَىٰ بِٱللَّهِ شَهِيدًۢا بَيْنِى وَبَيْنَكُمْ وَمَنْ عِندَهُۥ عِلْمُ ٱلْكِتَٰبِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) “நீர் தூதராக இல்லை” என்று நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள். “எனக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் அல்லாஹ்வும், வேதத்தின் ஞானம் எவரிடம் உள்ளதோ அவரும் சாட்சியால் போதுமாகி விட்டனர்” என்று கூறுவீராக!
Tamil Translation - Omar Sharifமேலும், (நபியே!) “நீர் தூதராக இருக்கவில்லை” என்று நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள். (நபியே!) நீர் கூறுவீராக: “எனக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் அல்லாஹ் போதுமான சாட்சியாக இருக்கிறான். இன்னும், வேதத்தின் ஞானம் உள்ளவர்களும் போதுமான சாட்சிகளாக இருக்கின்றனர்.”
Tamil Translation - Abdulhamid Baqawi43. (நபியே!) ‘‘நீர் (இறைவனால்) அனுப்பப்பட்ட தூதர் அல்ல'' என்று இந்நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். அதற்கு (அவர்களை நோக்கி, ‘‘இதைப் பற்றி) எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ்வும், வேத ஞானம் உடையவர்களும் போதுமான சாட்சிகளாவர்'' என்று கூறுவீராக.