وَهُوَ ٱلَّذِى مَدَّ ٱلْأَرْضَ وَجَعَلَ فِيهَا رَوَٰسِىَ وَأَنْهَٰرًا وَمِن كُلِّ ٱلثَّمَرَٰتِ جَعَلَ فِيهَا زَوْجَيْنِ ٱثْنَيْنِ يُغْشِى ٱلَّيْلَ ٱلنَّهَارَ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَٰتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் பூமியை விரித்தவன்; அதில் மலைகளையும் ஆறுகளையும் அமைத்தவன். அவற்றில் எல்லாக் கனிகளிலும் இரண்டு ஜோடிகளை ஆக்கினான். இரவால் பகலை மூடுகின்றான். சிந்திக்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
Tamil Translation - Omar Sharifஅவன்தான் பூமியை விரித்தான்; இன்னும், அதில் மலைகளையும் ஆறுகளையும் ஏற்படுத்தினான். இன்னும், அவற்றில் எல்லாக் கனிகளிலும் இரண்டு ஜோடிகளை ஏற்படுத்தினான். இரவினால் பகலை மூடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு நிச்சயமாக (இறைவன் ஒருவனே என்பதை உணர்த்தும் பல) அத்தாட்சிகள் இதில் இருக்கின்றன.
Tamil Translation - Abdulhamid Baqawi3. அவன்தான் பூமியை விரித்து, அதில் உறுதியான (பெரிய பெரிய) மலைகளையும் (நீண்ட) ஆறுகளையும் அமைத்தான். ஒவ்வொரு கனிவர்க்கத்(தின் மரங்களையும் ஆண் பெண் கொண்ட ஜ)தை ஜதைகளாக்கினான். இரவைக் கொண்டு பகலை மூடுகிறான். சிந்திக்கக்கூடிய மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.