caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yusuf அத்தியாயம், வசனம் 93

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 53 · 12:93

ٱذْهَبُوا۟ بِقَمِيصِى هَٰذَا فَأَلْقُوهُ عَلَىٰ وَجْهِ أَبِى يَأْتِ بَصِيرًا وَأْتُونِى بِأَهْلِكُمْ أَجْمَعِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“நீங்கள் எனது இந்த சட்டையைக் கொண்டு சென்று, என் தந்தையின் முகத்தில் அதைப் போடுங்கள். அவர் பார்வையுடையவராக வருவார். நீங்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்.”
Tamil Translation - Omar Sharif“நீங்கள் எனது இந்த சட்டையைக் கொண்டு செல்லுங்கள்; மேலும், என் தந்தையின் முகத்தில் அதைப் போடுங்கள். அவர் பார்வையுடையவராக ஆகிவிடுவார். இன்னும், நீங்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi93. ‘‘நீங்கள் என் இந்தச் சட்டையைக் கொண்டு போய் என் தந்தை முகத்தில் போடுங்கள். (அதனால் உடனே) அவர் (இழந்த) பார்வையை அடைந்து விடுவார். பின்னர் நீங்கள் உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்'' என்று கூறி (அனுப்பி)னார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70