caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yusuf அத்தியாயம், வசனம் 94

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 53 · 12:94

وَلَمَّا فَصَلَتِ ٱلْعِيرُ قَالَ أَبُوهُمْ إِنِّى لَأَجِدُ رِيحَ يُوسُفَ لَوْلَآ أَن تُفَنِّدُونِ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவர்களின்) பயணக் கூட்டம் (எகிப்திலிருந்து) பிரியவே, அவர்களின் தந்தை (“இதோ) யூஸுஃபுடைய வாடையை நிச்சயமாக நான் பெறுகிறேன்; என்னை நீங்கள் அறிவீனனாக்காமல் (பழிக்காமல்) இருக்கவேண்டுமே!” என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharif(அவர்களின்) பயணக் கூட்டம் (எகிப்திலிருந்து) புறப்படவே, அவர்களின் தந்தை கூறினார்: (“இதோ) யூஸுஃபுடைய வாடையை நிச்சயமாக நான் பெறுகிறேன்; என்னை நீங்கள் அறிவீனனாக ஆக்காமல் (என்னை பழிக்காமல்) இருக்க வேண்டுமே!”
Tamil Translation - Abdulhamid Baqawi94. அவர்களின் ஒட்டக வாகனங்கள் (எகிப்திலிருந்து) பிரியவே, அவர்களின் தந்தை (‘‘இதோ) யூஸுஃபுடைய வாடையை நிச்சயமாக நான் நுகர்கிறேன்; (இதனால்) என்னை நீங்கள் பைத்தியக்காரன் என்று எண்ணாமலிருக்க வேண்டுமே!'' என்றார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70