caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yusuf அத்தியாயம், வசனம் 83

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 53 · 12:83

قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنفُسُكُمْ أَمْرًا فَصَبْرٌ جَمِيلٌ عَسَى ٱللَّهُ أَن يَأْتِيَنِى بِهِمْ جَمِيعًا إِنَّهُۥ هُوَ ٱلْعَلِيمُ ٱلْحَكِيمُ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“மாறாக! உங்கள் ஆன்மாக்கள் ஒரு காரியத்தை அலங்கரித்தன. ஆகவே, அழகிய பொறுமை(தான் நல்லது). அல்லாஹ் அவர்கள் அனைவரையும் என்னிடம் கொண்டு வரக்கூடும். நிச்சயமாக அவன்தான் நன்கறிந்தவன், மகா ஞானவான்” என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharif(யஅகூப்) கூறினார்: “மாறாக! உங்கள் ஆன்மாக்கள் ஒரு காரியத்தை அலங்கரித்தன. ஆகவே, அழகிய பொறுமை(யாக எனது பொறுமை இருக்கட்டும்). அல்லாஹ், அவர்கள் அனைவரையும் என்னிடம் கொண்டு வரக்கூடும். நிச்சயமாக அவன்தான் நன்கறிந்தவன், மகா ஞானவான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi83. (ஊர் திரும்பிய மற்ற சகோதரர்கள் இதைத் தங்கள் தந்தை யஅகூப் நபியிடம் கூறவே, அதற்கவர் ‘‘நீங்கள் கூறுவது சரியல்ல!) மாறாக, உங்கள் மனம், ஒரு (தவறான) விஷயத்தைச் செய்யும்படி உங்களைத் தூண்டிவிட்டது. ஆகவே, (எவரையும் குறைகூறாது) சகித்துக் கொள்வதே மிக்க நன்று. அல்லாஹ் அவர்கள் அனைவரையும் என்னிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுவான். நிச்சயமாக அவன் அனைத்தையும் அறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்'' என்று கூறிவிட்டு,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70