caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yusuf அத்தியாயம், வசனம் 43

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 53 · 12:43

وَقَالَ ٱلْمَلِكُ إِنِّىٓ أَرَىٰ سَبْعَ بَقَرَٰتٍ سِمَانٍ يَأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَسَبْعَ سُنۢبُلَٰتٍ خُضْرٍ وَأُخَرَ يَابِسَٰتٍ يَٰٓأَيُّهَا ٱلْمَلَأُ أَفْتُونِى فِى رُءْيَٰىَ إِن كُنتُمْ لِلرُّءْيَا تَعْبُرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(எகிப்தின்) அரசர் கூறினார்: “கொழுத்த ஏழு பசுக்களை, அவற்றை இளைத்த ஏழு பசுக்கள் புசிப்பதாகவும், பசுமையான ஏழு கதிர்களையும் காய்ந்த வேறு (கதிர்களையும்) நிச்சயமாக என் கனவில் கண்டேன். என் பிரமுகர்களே! நீங்கள் கனவுக்கு வியாக்கியானம் கூறுபவர்களாக இருந்தீர்களானால் என் கனவிற்கு எனக்கு விளக்கம் தாருங்கள்,”
Tamil Translation - Omar Sharif(எகிப்தின்) அரசர் கூறினார்: “கொழுத்த ஏழு பசுக்களை, அவற்றை இளைத்த ஏழு பசுக்கள் புசிப்பதாகவும், பசுமையான ஏழு கதிர்களையும் (அவை அல்லாத) காய்ந்த வேறு கதிர்களையும் நிச்சயமாக நான் என் கனவில் கண்டேன். என் (சபை) பிரமுகர்களே! நீங்கள் கனவுக்கு வியாக்கியானம் கூறுபவர்களாக இருந்தீர்களேயானால் என் கனவிற்கு எனக்கு விளக்கம் தாருங்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi43. (ஒரு நாளன்று) எகிப்தின் அரசர் (தன் பிரதானிகளை நோக்கி) ‘‘என் பிரதானிகளே! கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை, இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதாகவும், நன்கு விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் காய்ந்து உலர்ந்த (சாவியான வேறு ஏழு) கதிர்களையும் என் கனவில் கண்டேன். என் பிரதானிகளே! நீங்கள் கனவுகளுக்கு வியாக்கியானம் கூறக்கூடியவர்களாக இருந்தால் என் இக்கனவின் பலனை அறிவியுங்கள்'' என்று கூறினார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70