وَقَالَ لِلَّذِى ظَنَّ أَنَّهُۥ نَاجٍ مِّنْهُمَا ٱذْكُرْنِى عِندَ رَبِّكَ فَأَنسَىٰهُ ٱلشَّيْطَٰنُ ذِكْرَ رَبِّهِۦ فَلَبِثَ فِى ٱلسِّجْنِ بِضْعَ سِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவ்விருவரில் நிச்சயமாக எவர் தப்பிப்பவர் என்று தான் எண்ணினாரோ அவரிடம், நீ உன் எஜமானனிடம் என்னைப் பற்றி கூறு! என்று கூறினார். (யூஸுஃப்) தன் இறைவனை நினைவு கூருவதை ஷைத்தான் அவருக்கு மறக்கடித்தான். ஆகவே, அவர் சிறையில் (மேலும்) சில ஆண்டுகள் தங்கினார்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (யூஸுஃப்) கூறினார்: “அவ்விருவரில் நிச்சயமாக எவர் தப்பிப்பவர் என்று அவர் எண்ணினாரோ அவரிடம், நீ உன் எஜமானனிடம் என்னைப் பற்றி கூறு!” ஆக, (யூஸுஃப்) தன் இறைவனை நினைவு கூர்வதை ஷைத்தான் அவருக்கு மறக்கடித்தான். ஆகவே, அவர் சிறையில் (மேலும்) சில ஆண்டுகள் தங்கினார்.
Tamil Translation - Abdulhamid Baqawi42. மேலும், அவ்விருவரில் எவன் விடுதலை அடைவானென அவர் எண்ணினாரோ (அவனை நோக்கி) நீ உன் எஜமானனிடம் என்னைப் பற்றி (அநியாயமாக சிறையிடப்பட்டிருக்கிறேன் என்று) கூறுவாயாக! என்றும் சொன்னோர். எனினும் (சிறைக் கூடத்திலிருந்து விடுதலையாகி வெளியேறிய) அவன் தன் எஜமானனிடம் கூற இருந்த (எண்ணத்)தை ஷைத்தான், அவனுக்கு மறக்கடித்துவிட்டான். ஆதலால், அவர் சிறைக்கூடத்தில் (இன்னும்) பல ஆண்டுகள் தங்கிவிட்டார்.