مَا تَعْبُدُونَ مِن دُونِهِۦٓ إِلَّآ أَسْمَآءً سَمَّيْتُمُوهَآ أَنتُمْ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلْطَٰنٍ إِنِ ٱلْحُكْمُ إِلَّا لِلَّهِ أَمَرَ أَلَّا تَعْبُدُوٓا۟ إِلَّآ إِيَّاهُ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلْقَيِّمُ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்களும் உங்கள் மூதாதைகளும் பெயர் சூட்டிய பெயர்களைத் தவிர அவனை அன்றி (வேறு எதையும்) நீங்கள் வணங்குவதில்லை. அல்லாஹ் இவற்றுக்கு எவ்வித ஆதாரத்தையும் இறக்கவில்லை. அதிகாரம் அல்லாஹ்விற்கே தவிர (வேறு எவருக்கும்) இல்லை. அவனைத் தவிர (மற்றவற்றை) நிச்சயமாக வணங்காதீர்கள் என்று அவன் கட்டளையிட்டான். இதுதான் நேரான மார்க்கம். எனினும், மக்களில் அதிகமானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifநீங்கள் வணங்குவதெல்லாம் நீங்களும் உங்கள் மூதாதைகளும் பெயர் சூட்டிய சிலைகளைத்தான். அல்லாஹ் இவற்றுக்கு எவ்வித ஆதாரத்தையும் இறக்கவில்லை. அதிகாரம் அல்லாஹ்விற்கே தவிர (எவருக்கும்) இல்லை. அவனைத் தவிர (எதையும்) வணங்காதீர்கள் என்று அவன் கட்டளையிட்டிருக்கிறான். இதுதான் நேரான மார்க்கம். எனினும், மக்களில் அதிகமானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi40. அல்லாஹ்வைத் தவிர்த்து நீங்கள் வணங்குபவை அனைத்தும், நீங்களும் உங்கள் மூதாதைகளும் வைத்துக் கொண்ட வெறும் (கற்பனைப்) பெயர்களைத்தவிர (உண்மையில் அவை ஒன்றுமே) இல்லை. அல்லாஹ் இதற்கு ஓர் ஆதாரத்தையும் இறக்கிவைக்கவுமில்லை; எல்லா அதிகாரங்களும் அல்லாஹ் ஒருவனுக்கே தவிர (மற்றெவருக்கும்) இல்லை. அவனைத் தவிர (மற்ற எவற்றையும்) நீங்கள் வணங்கக் கூடாதென்று அவனே கட்டளை இட்டிருக்கிறான். இதுதான் நேரான மார்க்கம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறியவில்லை'' (என்று யூஸுஃப் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து,)