يُوسُفُ أَعْرِضْ عَنْ هَٰذَا وَٱسْتَغْفِرِى لِذَنۢبِكِ إِنَّكِ كُنتِ مِنَ ٱلْخَاطِـِٔينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“யூஸுஃபே! நீர் இதை விட்டுப் புறக்கணிப்பீராக! (பிறகு தன் மனைவியை நோக்கி) “நீ உன் பாவத்திற்கு மன்னிப்புத் தேடு, நிச்சயமாக நீ தவறிழைத்தவர்களில் இருக்கிறாய்” என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharif“யூஸுஃபே! நீர் இதை புறக்கணிப்பீராக! (பிறகு தன் மனைவியை நோக்கி) “நீ உன் பாவத்திற்காக மன்னிப்புத் தேடு. நிச்சயமாக நீ தவறிழைத்தவர்களில் இருக்கிறாய்.”
Tamil Translation - Abdulhamid Baqawi29. (யூஸுஃபை நோக்கி) ‘‘யூஸுஃபே! நீர் இதை இத்துடன் விட்டுவிடுவீராக. (இதைப்பற்றி எவரிடமும் கூற வேண்டாம்'' என்று கூறி மீண்டும் அவளை நோக்கி) ‘‘நீ உன் பாவத்திற்கு மன்னிப்பைத் தேடிக்கொள். நிச்சயமாக நீதான் குற்றம் செய்திருக்கிறாய்'' (என்று கூறினார்.)