caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yusuf அத்தியாயம், வசனம் 30

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 53 · 12:30

وَقَالَ نِسْوَةٌ فِى ٱلْمَدِينَةِ ٱمْرَأَتُ ٱلْعَزِيزِ تُرَٰوِدُ فَتَىٰهَا عَن نَّفْسِهِۦ قَدْ شَغَفَهَا حُبًّا إِنَّا لَنَرَىٰهَا فِى ضَلَٰلٍ مُّبِينٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநகரத்திலுள்ள பெண்கள் “அதிபரின் மனைவி தன் (அடிமையான) வாலிபனைத் தன் விருப்பத்திற்கு (பலவந்தமாக) அழைக்கிறாள். அவர் அவளை அன்பால் ஈர்த்து விட்டார்! நிச்சயமாக நாம் அவளை தெளிவானதொரு வழிகேட்டில் காண்கிறோம்”என்று கூறினர்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நகரத்திலுள்ள பெண்கள் கூறினார்கள்: “அதிபரின் மனைவி தன் (அடிமையாக இருக்கின்ற) வாலிபனைத் தன் விருப்பத்திற்கு (பலவந்தமாக) அழைக்கிறாள். திட்டமாக அவர் மீது அவள் வைத்த அன்பு அவளது உள்ளத்தின் ஆழத்தில் ஊடுருவி விட்டது! நிச்சயமாக நாம் அவளை தெளிவானதொரு வழிகேட்டில் காண்கிறோம்.”
Tamil Translation - Abdulhamid Baqawi30. (இவ்விஷயம் வெளியில் பரவவே) அப்பட்டிணத்திலுள்ள பெண்கள் பலரும் (இதை இழிவாகக் கருதி) ‘‘அதிபதியின் மனைவி தன்னிடமுள்ள ஒரு (அடிமையான) ஒரு வாலிபனைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்துகிறாள். காதல் அவளை மயக்கி விட்டது! நிச்சயமாக அவள் மிகத் தவறான வழியில் இருப்பதையே நாங்கள் காண்கிறோம்'' என்று (இழிவாகப்) பேசலானார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70