قُلْ هَٰذِهِۦ سَبِيلِىٓ أَدْعُوٓا۟ إِلَى ٱللَّهِ عَلَىٰ بَصِيرَةٍ أَنَا۠ وَمَنِ ٱتَّبَعَنِى وَسُبْحَٰنَ ٱللَّهِ وَمَآ أَنَا۠ مِنَ ٱلْمُشْرِكِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக: “இது என் வழி. நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான அறிவின் மீது இருந்து கொண்டு அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறோம். அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். நான் இணைவைப்பவர்களில் இல்லை.”
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக: “(அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குவது,) இதுதான் என் பாதையாகும். நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான அறிவின் மீது இருந்தவர்களாக அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறோம். அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். நான் இணைவைப்பவர்களில் உள்ளவன் இல்லை.”
Tamil Translation - Abdulhamid Baqawi108. (நபியே!) கூறுவீராக: ‘‘இதுவே எனது (நேரான) வழி. நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். தெளிவான ஆதாரத்தின் மீதே நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (இணை துணைகளை விட்டு) அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். ஆகவே, நான் (அவனுக்கு) இணைவைப்பவர்களில் உள்ளவன் இல்லை.''