أَفَأَمِنُوٓا۟ أَن تَأْتِيَهُمْ غَٰشِيَةٌ مِّنْ عَذَابِ ٱللَّهِ أَوْ تَأْتِيَهُمُ ٱلسَّاعَةُ بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வின் வேதனையிலிருந்து சூழக்கூடியது அவர்களுக்கு வருவதை அல்லது அவர்கள் அறியாமல் இருக்க திடீரென முடிவு காலம் அவர்களுக்கு வருவதை அவர்கள் அச்சமற்று விட்டனரா? (சூழக்கூடியது: அனைத்தையும் அழிக்கக் கூடியது)
Tamil Translation - Omar Sharifஆக, அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து (அவர்களை) சூழ்ந்து கொள்ளக்கூடிய ஒரு தண்டனை அவர்களிடம் வருவதை; அல்லது அவர்கள் அறியாமல் இருக்கும் நிலையில் திடீரென மறுமை அவர்களிடம் வருவதை அவர்கள் அச்சமற்று விட்டனரா?
Tamil Translation - Abdulhamid Baqawi107. (அவர்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களிடம் வராதென்றோ அல்லது அவர்கள் அறியாத நிலைமையில் திடுகூறாய் (அவர்களுடைய) முடிவு காலம் அவர்களுக்கு வராதென்றோ அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா?