قَالَ يَٰقَوْمِ أَرَهْطِىٓ أَعَزُّ عَلَيْكُم مِّنَ ٱللَّهِ وَٱتَّخَذْتُمُوهُ وَرَآءَكُمْ ظِهْرِيًّا إِنَّ رَبِّى بِمَا تَعْمَلُونَ مُحِيطٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“என் மக்களே! அல்லாஹ்வை விட என் இனத்தாரா உங்களிடம் மதிப்புடையவர்கள்? நீங்கள் அவனை உங்களுக்குப் பின்னால் எறியப்பட்டவனாக எடுத்துக் கொண்டீர்கள். நிச்சயமாக என் இறைவன் நீங்கள் செய்பவற்றைச் சூழ்ந்திருப்பவன்” என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharifஅவர் கூறினார்: “என் மக்களே! அல்லாஹ்வை விட என் குடும்பதார்களா உங்களிடம் மதிப்புடையவர்கள்? நீங்கள் அவனை உங்களுக்குப் பின்னால் எறியப்பட்டவனாக எடுத்துக் கொண்டீர்கள். நிச்சயமாக என் இறைவன் நீங்கள் செய்பவற்றைச் சூழ்ந்தறிபவன் ஆவான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi92. அதற்கவர் ‘‘என் மக்களே! அல்லாஹ்வைவிட என் இனத்தாரா உங்களுக்கு மிக்க மதிப்புடையவர்களாகி விட்டனர்? நீங்கள் அவனை உங்கள் முதுகுப்புறம் தள்ளி விட்டீர்கள். நிச்சயமாக என் இறைவன் நீங்கள் செய்வதைச் சூழ்ந்துள்ளான்'' என்று கூறினார்.