caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Hud அத்தியாயம், வசனம் 93

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 52 · 11:93

وَيَٰقَوْمِ ٱعْمَلُوا۟ عَلَىٰ مَكَانَتِكُمْ إِنِّى عَٰمِلٌ سَوْفَ تَعْلَمُونَ مَن يَأْتِيهِ عَذَابٌ يُخْزِيهِ وَمَنْ هُوَ كَٰذِبٌ وَٱرْتَقِبُوٓا۟ إِنِّى مَعَكُمْ رَقِيبٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“என் மக்களே! நீங்கள் உங்கள் தகுதிக்கு ஏற்ப செயல்படுங்கள், நிச்சயமாக நான் (என் தகுதிக்கு ஏற்ப) செயல்படுகிறேன். தன்னை இழிவுபடுத்தும் வேதனை யாருக்கு வரும்? இன்னும் யார் பொய்யர்? என்பதை (விரைவில்) அறிவீர்கள். எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நான் உங்களுடன் எதிர்பார்ப்பவன் ஆவேன்.”
Tamil Translation - Omar Sharif“இன்னும், என் மக்களே! நீங்கள் உங்கள் தகுதிக்கு ஏற்ப செயல்களை செய்யுங்கள், நிச்சயமாக நான் (என் தகுதிக்கு ஏற்ப) செயல்களை செய்கிறேன். யாருக்கு, - அவரை இழிவுபடுத்தும் - தண்டனை வரும்; இன்னும், யார் பொய்யர் என்பதை (விரைவில்) அறிவீர்கள். இன்னும், எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நான் உங்களுடன் எதிர்பார்ப்பவன் ஆவேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi93. ‘‘என் மக்களே! நீங்கள் உங்கள் போக்கில் (உங்கள் காரியத்தைச்) செய்து கொண்டிருங்கள், நானும் (என் போக்கில் என் காரியத்தைச்) செய்து கொண்டிருக்கிறேன். இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடையும்? பொய் சொல்பவர் யார்? என்பதை நீங்கள் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வீர்கள். (அந்நேரத்தை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நானும் உங்களுடன் (அதை) எதிர்பார்த்திருக்கிறேன்'' (என்றும் கூறினார்).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70