وَٱمْرَأَتُهُۥ قَآئِمَةٌ فَضَحِكَتْ فَبَشَّرْنَٰهَا بِإِسْحَٰقَ وَمِن وَرَآءِ إِسْحَٰقَ يَعْقُوبَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவருடைய மனைவி நின்றுகொண்டிருந்தாள். (அவள்) சிரித்தாள்; அவளுக்கு ‘இஸ்ஹாக்’ (என்னும் மகனைக்) கொண்டும், இஸ்ஹாக்கிற்குப் பின்னால் ‘யஅகூபைக்’ கொண்டும் நற்செய்தி கூறினோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவருடைய மனைவி (ஸாரா) நின்றுகொண்டிருந்தாள். ஆக, (வானவர்கள் கூறியதைக் கேட்ட பின்னர் லூத் நபியின் சமுதாயம் அழிக்கப்பட போவதையும், அதை அவர்கள் அறியாமல் இருப்பதையும் நினைத்து) அவள் சிரித்தாள். ஆக, அவளுக்கு (குழைந்தாயாக) இஸ்ஹாக்கையும்; இன்னும், இஸ்ஹாக்கிற்குப் பின்னால் (பேரனாக) யஅகூபையும் (வழங்குவோம் என்று) நற்செய்தி கூறினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi71. (அச்சமயம் அங்கு) நின்று கொண்டிருந்த அவருடைய (கிழ) மனைவி (லூத் நபியின் மக்கள் செய்யும் தீய காரியங்களைச் செவியுற்று) சிரித்தாள்; ஆனால், அதே சமயத்தில் அவளுக்கு ‘இஸ்ஹாக்' (என்னும் மகனைப்) பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின்னர் ‘யஅகூப்' (என்னும் பேரன் பிறக்கப் போவதைப்) பற்றியும் நற்செய்தி கூறினோம்.