caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Hud அத்தியாயம், வசனம் 70

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 52 · 11:70

فَلَمَّا رَءَآ أَيْدِيَهُمْ لَا تَصِلُ إِلَيْهِ نَكِرَهُمْ وَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً قَالُوا۟ لَا تَخَفْ إِنَّآ أُرْسِلْنَآ إِلَىٰ قَوْمِ لُوطٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களுடைய கைகள் அதன் பக்கம் சேராததை அவர் பார்த்தபோது அவர்களைப் பற்றி சந்தேகித்தார்; அவர்களைப் பற்றிய பயத்தை அவர் (மனதில்) மறைத்தார். அவர்கள் (இப்ராஹீமே) “பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடைய மக்களின் பக்கம் (அவர்களை அழிக்க) அனுப்பப்பட்டோம்” என்று கூறினார்கள்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்களுடைய கைகள் அதன் பக்கம் செல்லாததை அவர் பார்த்தபோது அவர்களைப் பற்றி சந்தேகித்தார்; இன்னும், அவர்களைப் பற்றிய பயத்தை அவர் (மனதில்) மறைத்தார். “(இப்ராஹீமே) பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடைய மக்களின் பக்கம் (அம்மக்களை அழிப்பதற்காக) அனுப்பப்பட்டோம்” என்று (அந்த வானவர்கள்) கூறினார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi70. அவர்களுடைய கைகள் அதனிடம் செல்லாததைக் கண்டதும் அவர்களைப் பற்றி சந்தேகித்தார்; அவர்களைப் பற்றிய பயமும் அவர் மனதில் ஊசலாடியது. (அப்பொழுது) அவர்கள் (இப்றாஹீமை நோக்கி) ‘‘நீர் பயப்படாதீர். நிச்சயமாக நாங்கள் ‘லூத்'துடைய மக்களிடம் (அவர்களை அழித்துவிட) அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று கூறினார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70