caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Hud அத்தியாயம், வசனம் 69

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 52 · 11:69

وَلَقَدْ جَآءَتْ رُسُلُنَآ إِبْرَٰهِيمَ بِٱلْبُشْرَىٰ قَالُوا۟ سَلَٰمًا قَالَ سَلَٰمٌ فَمَا لَبِثَ أَن جَآءَ بِعِجْلٍ حَنِيذٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக நம் (வானவ) தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தியைக் கொண்டு வந்து, “(உமக்கு) ஈடேற்றம் உண்டாகுக” என்று கூறினர். (இப்ராஹீம்) (“உங்களுக்கும்) ஈடேற்றம் உண்டாகுக!” என்று கூறி, தாமதிக்காது சுடப்பட்ட ஒரு கன்றுக்குட்டி(யின் கறி)யைக் கொண்டு வந்தார்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், திட்டவட்டமாக நம் (வானவ) தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தியை கொண்டு வந்தனர். “(உமக்கு) ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக” என்று அவர்கள் கூறினார்கள். (அதற்கு இப்ராஹீம்,) (“உங்களுக்கும்) ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக!” என்று கூறினார். உடனே தாமதிக்காது சுடப்பட்ட ஒரு கன்றுக்குட்டி(யின் கறி)யைக் கொண்டு வந்தார்.
Tamil Translation - Abdulhamid Baqawi69. நிச்சயமாக (வானவர்களிலுள்ள) நம் தூதர்கள் இப்றாஹீமுக்கு நற்செய்தி கொண்டு வந்து “ஸலாம்'' கூறினர். (இப்றாஹீம் அதற்குப் பிரதியாக “உங்களுக்கும்) ஸலாம்'' கூறி சிறிதும் தாமதிக்காது (அறுத்துச்) சுட்டதொரு கன்றுக்குட்டியைக் கொண்டு வந்(து அவர்கள் முன் வைத்)தார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70