وَيَٰقَوْمِ هَٰذِهِۦ نَاقَةُ ٱللَّهِ لَكُمْ ءَايَةً فَذَرُوهَا تَأْكُلْ فِىٓ أَرْضِ ٱللَّهِ وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٍ فَيَأْخُذَكُمْ عَذَابٌ قَرِيبٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“என் மக்களே! இது உங்களுக்கு அல்லாஹ்வின் அத்தாட்சியான பெண் ஒட்டகமாகும். ஆகவே, அதை விட்டுவிடுங்கள் அது அல்லாஹ்வின் பூமியில் சாப்பிடட்டும்; அதற்கு ஒரு கெடுதியையும் செய்யாதீர்கள். (அவ்வாறு செய்தால்) அதிசீக்கிரமான வேதனை உங்களைப் பிடிக்கும்.”
Tamil Translation - Omar Sharifஇன்னும், “என் மக்களே! இது உங்களுக்கு அல்லாஹ்வின் அத்தாட்சியான பெண் ஒட்டகமாகும். ஆகவே, அதை விட்டுவிடுங்கள், அது அல்லாஹ்வின் பூமியில் சாப்பிடட்டும்; இன்னும், அதற்கு எவ்வித கெடுதியும் செய்யாதீர்கள். (அவ்வாறு செய்தால்) அதிசீக்கிரமான தண்டனை உங்களை பிடித்துக் கொள்ளும்.”
Tamil Translation - Abdulhamid Baqawi64. ‘‘என் மக்களே! இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் ஒட்டகமாகும். உங்களுக்கு இது ஓர் அத்தாட்சியாகவே அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அல்லாஹ்வினுடைய பூமியில் (அது விரும்பிய இடத்தில்) மேய அதை விட்டுவிடுங்கள்; அதற்கு ஒரு கெடுதலும் செய்ய(க் கருதி) அதைத் தொடாதீர்கள். அவ்வாறு செய்தால் அதிசீக்கிரத்தில் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்'' (என்று சொன்னார்.)