فَعَقَرُوهَا فَقَالَ تَمَتَّعُوا۟ فِى دَارِكُمْ ثَلَٰثَةَ أَيَّامٍ ذَٰلِكَ وَعْدٌ غَيْرُ مَكْذُوبٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதை வெட்டினார்கள். ஆகவே, மூன்று நாள்கள் உங்கள் இல்லத்தில் (ஊரில்) சுகமாக இருங்கள். (பிறகு வேதனை வரும்.) இது ஒரு பொய்ப்பிக்கப்படாத வாக்காகும் என்று (ஸாலிஹ்) கூறினார்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்கள் அ(ந்த ஒட்டகத்)தை வெட்டினார்கள். ஆகவே, (ஸாலிஹ்) கூறினார்: “மூன்று நாட்கள் உங்கள் ஊரில் சுகமாக இருங்கள். (பிறகு, தண்டனை வரும்.) இது ஒரு பொய்ப்பிக்கப்படமுடியாத வாக்காகும்.”
Tamil Translation - Abdulhamid Baqawi65. எனினும், அவர்கள் (அவருடைய கட்டளைக்கு மாறு செய்து) அதை வெட்டி விட்டார்கள். ஆகவே, அவர் (அவர்களை நோக்கி, ‘‘இனி) மூன்று நாள்கள்வரை உங்கள் வீடுகளில் (இருந்து கொண்டு) நீங்கள் சுகமடையலாம். (அதற்குப் பின்னர் அல்லாஹ்வுடைய வேதனை உங்களை வந்தடையும்) இது தவறாத வாக்காகும்'' என்று கூறினார்.