caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Hud அத்தியாயம், வசனம் 59

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 52 · 11:59

وَتِلْكَ عَادٌ جَحَدُوا۟ بِـَٔايَٰتِ رَبِّهِمْ وَعَصَوْا۟ رُسُلَهُۥ وَٱتَّبَعُوٓا۟ أَمْرَ كُلِّ جَبَّارٍ عَنِيدٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதங்கள் இறைவனின் அத்தாட்சிகளை மறுத்த, அ(ந்த இறை)வனுடைய தூதர்களுக்கு மாறு செய்த. பிடிவாதக்காரர்கள், முரடர்கள் (ஆகிய) எல்லோருடைய (தீய) கட்டளையை பின்பற்றிய ‘ஆது’(மக்கள்) இவர்கள்தான்.
Tamil Translation - Omar Sharifஇவர்கள்தான் ஆது சமுதாய மக்கள் ஆவர். இவர்கள் தங்கள் இறைவனின் அத்தாட்சிகளை மறுத்தார்கள். இன்னும், அவனுடைய தூதர்களுக்கு மாறு செய்தார்கள். இன்னும், பெருமை பிடித்த பிடிவாதக்காரர்கள், கீழ்ப்படியாத முரடர்கள் (ஆகிய தீயோர்) எல்லோருடைய (தீய) கட்டளையை பின்பற்றினார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi59. (நபியே!) இது ‘ஆது' மக்களின் (சரித்திரமாகும்). அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளைகளை நிராகரித்து அவனின் தூதர்களுக்கு மாறு செய்தார்கள். மேலும், பிடிவாதக்கார முரடர்கள் அனைவருடைய தீய வழிகாட்டல்களையும் அவர்கள் பின் பற்றினார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70