قَالُوا۟ يَٰهُودُ مَا جِئْتَنَا بِبَيِّنَةٍ وَمَا نَحْنُ بِتَارِكِىٓ ءَالِهَتِنَا عَن قَوْلِكَ وَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“ஹூதே! எந்த ஓர் அத்தாட்சியையும் நம்மிடம் நீர் கொண்டு வரவில்லை. உம் சொல்லுக்காக நாங்கள் எங்கள் தெய்வங்களை விடுபவர்களாக இல்லை. உம்மை நாங்கள் நம்பிக்கை கொண்டவர்களாகவும் இல்லை” என்று கூறினர்.
Tamil Translation - Omar Sharif(மேலும் அந்த மக்கள்) கூறினார்கள்: “ஹூதே! எந்த ஓர் அத்தாட்சியையும் நம்மிடம் நீர் கொண்டு வரவில்லை. இன்னும், உம் சொல்லுக்காக நாங்கள் (வணங்குகின்ற) எங்கள் தெய்வங்களை விட்டுவிடுபவர்களாக இல்லை. இன்னும், நாங்கள் உம்மை நம்பிக்கை கொண்டவர்களாகவும் இல்லை”
Tamil Translation - Abdulhamid Baqawi53. அதற்கவர்கள், ‘ஹூதே! நீர் (நாம் விரும்பியவாறு) அத்தாட்சி எதையும் நம்மிடம் கொண்டு வரவில்லை. உமது சொல்லுக்காக நாங்கள் எங்கள் தெய்வங்களை விட்டு விட மாட்டோம். உம்மை நாங்கள் நம்பவும் மாட்டோம்'' என்று கூறினார்கள்.