إِن نَّقُولُ إِلَّا ٱعْتَرَىٰكَ بَعْضُ ءَالِهَتِنَا بِسُوٓءٍ قَالَ إِنِّىٓ أُشْهِدُ ٱللَّهَ وَٱشْهَدُوٓا۟ أَنِّى بَرِىٓءٌ مِّمَّا تُشْرِكُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version‘‘எங்கள் தெய்வங்களில் சில உமக்கு ஒரு தீமையை செய்துவிட்டன என்றே தவிர நாம் கூறமாட்டோம்” (என்றும் அவர்கள் கூறினார்கள். அதற்கு ஹூது) கூறினார்: நீங்கள் (அவனை அன்றி கற்பனையாக) இணைவைத்து வணங்குபவற்றிலிருந்து நிச்சயமாக நான் விலகியவன் என்பதற்கு நிச்சயமாக நான் அல்லாஹ்வை சாட்சியாக்குகிறேன்; இன்னும், நீங்களும் (அதற்கு) சாட்சியாக இருங்கள்!
Tamil Translation - Omar Sharif‘‘எங்கள் தெய்வங்களில் சில உமக்கு ஒரு தீமையை செய்துவிட்டன என்றே தவிர நாம் கூறமாட்டோம்” (என்றும் அவர்கள் கூறினார்கள். அதற்கு ஹூது) கூறினார்: “நீங்கள் (அவனை அன்றி கற்பனையாக) இணைவைத்து வணங்குபவற்றிலிருந்து நிச்சயமாக நான் விலகியவன் என்பதற்கு நிச்சயமாக நான் அல்லாஹ்வை சாட்சியாக்குகிறேன்; இன்னும், நீங்களும் (அதற்கு) சாட்சியாக இருங்கள்!
Tamil Translation - Abdulhamid Baqawi54. ‘‘எங்களது சில தெய்வங்கள் உமக்குக் கேடு உண்டுபண்ணிவிட்டன. (ஆதலால், நீர் மதியிழந்து விட்டீர்! என்றும் கூறினார்கள்). அதற்கவர், ‘‘நிச்சயமாக நான் அல்லாஹ்வை சாட்சியாக்குகிறேன்; நிச்சயமாக நான் அவனையன்றி நீங்கள் இணைவைத்து வணங்குபவற்றிலிருந்து விலகிக்கொண்டேன். (இதற்கு) நீங்களும் சாட்சியாக இருங்கள்'' என்று கூறினார்.