caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Hud அத்தியாயம், வசனம் 52

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 52 · 11:52

وَيَٰقَوْمِ ٱسْتَغْفِرُوا۟ رَبَّكُمْ ثُمَّ تُوبُوٓا۟ إِلَيْهِ يُرْسِلِ ٱلسَّمَآءَ عَلَيْكُم مِّدْرَارًا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَىٰ قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا۟ مُجْرِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version‘‘என் மக்களே! உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். (பாவங்களை விட்டு) திருந்தி (நன்மை செய்து) அவன் பக்கம் திரும்புங்கள். மழையை உங்களுக்கு தாரை தாரையாக அனுப்புவான். உங்கள் பலத்துடன் (மேலும்) பலத்தை உங்களுக்கு அதிகப்படுத்துவான். (புறக்கணித்த) குற்றவாளிகளாக திரும்பி விடாதீர்கள்.”
Tamil Translation - Omar Sharif‘‘என் மக்களே! உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள்! பிறகு, (எல்லா பாவங்களை விட்டும்) திருந்தி (நன்மைகளை செய்து) அவன் பக்கம் திரும்புங்கள்! மழையை உங்களுக்கு தாரை தாரையாக அனுப்புவான். இன்னும், உங்கள் பலத்துடன் (மேலும்) பலத்தை உங்களுக்கு அதிகப்படுத்துவான். இன்னும், (உபதேசங்களை புறக்கணித்த) குற்றவாளிகளாக விலகி சென்று விடாதீர்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi52. என் மக்களே! நீங்கள் உங்கள் இறைவனிடம் பாவ மன்னிப்பைக் கோரி (மனம்வருந்தி) அவன் பக்கமே திரும்புங்கள். (அவன் தடுத்திருக்கும்) மழையை உங்கள் மீது ஏராளமாகப் பொழியச் செய்வான். உங்கள் பலத்தை மேலும், (மேலும்,) அதிகரிக்கச் செய்வான். ஆகவே, நீங்கள் அவனைப் புறக்கணித்துக் குற்றமிழைத்து விடாதீர்கள்'' (என்று கூறினார்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70