caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Hud அத்தியாயம், வசனம் 3

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 52 · 11:3

وَأَنِ ٱسْتَغْفِرُوا۟ رَبَّكُمْ ثُمَّ تُوبُوٓا۟ إِلَيْهِ يُمَتِّعْكُم مَّتَٰعًا حَسَنًا إِلَىٰٓ أَجَلٍ مُّسَمًّى وَيُؤْتِ كُلَّ ذِى فَضْلٍ فَضْلَهُۥ وَإِن تَوَلَّوْا۟ فَإِنِّىٓ أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيرٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். பிறகு, (நன்மை செய்து) அவன் பக்கம் திரும்புங்கள். (அவ்வாறு செய்தால்) ஒரு குறிப்பிடப்பட்ட காலம் வரை உங்களுக்கு அழகிய சுகமான வாழ்வளிப்பான். அதிகமுடையவ(ர் அதை தர்மம் தரும் போது அவ)ருக்கு (மேலும்) அவருடைய அதிக(செல்வ)த்தை கொடுப்பான். நீங்கள் புறக்கணித்தால் ஒரு மாபெரும் நாளின் வேதனையை நிச்சயமாக நான் உங்கள் மீது பயப்படுகிறேன்.
Tamil Translation - Omar Sharif“இன்னும், நிச்சயமாக உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். பிறகு, முற்றிலும் திருந்தி (நன்மைகளை செய்து) அவன் பக்கம் திரும்புங்கள். (அவ்வாறு செய்தால் நீங்கள் உலகத்தில் வாழ்கின்ற) குறிப்பிடப்பட்ட காலம் வரை உங்களுக்கு அழகிய சுகமான வாழ்க்கையை வழங்குவான். இன்னும், மேல் மிச்சமான செல்வமுடையவ(ர் தனது செல்வத்தை தர்மம் செய்யும்போது அவ)ருக்கு (மேலும்) அவருடைய செல்வத்தை (அதிகப்படுத்தி) கொடுப்பான். இன்னும், நீங்கள் புறக்கணித்தால் மாபெரும் (மறுமை) நாளின் தண்டனையை நிச்சயமாக நான் உங்கள் மீது பயப்படுகிறேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi3. நீங்கள் உங்கள் இறைவனிடத்தில் பாவமன்னிப்பைக் கோரி (பாவங்களை விட்டு) அவன் பக்கம் திரும்புங்கள். (அவ்வாறு செய்தால்) ஒரு குறிப்பிட்ட (நீண்ட) காலம் வரை உங்களை இன்பமடையச் செய்வான். (தன் கடமைக்கு) அதிகமாக நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) அதிகமாகவே கொடுப்பான். நீங்கள் (அவனைப்) புறக்கணித்தால் மாபெரும் நாளின் வேதனை நிச்சயமாக உங்களை அணுகுமென்று நான் பயப்படுகிறேன்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70