وَيَٰقَوْمِ لَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مَالًا إِنْ أَجْرِىَ إِلَّا عَلَى ٱللَّهِ وَمَآ أَنَا۠ بِطَارِدِ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِنَّهُم مُّلَٰقُوا۟ رَبِّهِمْ وَلَٰكِنِّىٓ أَرَىٰكُمْ قَوْمًا تَجْهَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎன் மக்களே! இதன் மீது நான் உங்களிடம் செல்வத்தை (கூலியாகக்) கேட்கவில்லை. என் கூலி அல்லாஹ்வின் மீதே தவிர (உங்கள் மீது) இல்லை. நம்பிக்கை கொண்டவர்களை விரட்டுபவனாகவும் நான் இல்லை. நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை (கண்ணியத்துடன்) சந்திப்பவர்கள் ஆவர். என்றாலும் நிச்சயமாக நான் உங்களை அறியாத மக்களாக காண்கிறேன்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், “என் மக்களே! இதற்காக நான் உங்களிடம் எந்த செல்வத்தையும் (கூலியாகக்) கேட்கவில்லை. என் கூலி அல்லாஹ்வின் மீதே தவிர (உங்கள் மீது) இல்லை. இன்னும், நம்பிக்கை கொண்டவர்களை (என் சபையை விட்டும்) நான் விரட்டுபவனாக இல்லை. நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை (கண்ணியத்துடன்) சந்திப்பார்கள். என்றாலும், நீங்கள் அறியாத மக்களாக இருக்கிறீர்கள் என்றே நிச்சயமாக நான் உங்களை காண்கிறேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi29. ‘‘என் மக்களே! இதற்காக நான் உங்களிடம் ஒரு பொருளையும் (கூலியாகக்) கேட்கவில்லை. என் கூலி அல்லாஹ்விடமே தவிர (உங்களிடம்) இல்லை. (உங்களில் மிகத் தாழ்ந்தவர்களாயினும் சரி) நம்பிக்கை கொண்டவர்களை நான் விரட்டிவிட முடியாது. நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை (கண்ணியத்துடன்) சந்திப்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், நிச்சயமாக நான் உங்களை(த்தான் மிகத் தாழ்ந்த) மூடர்களாகக் காண்கிறேன்.