وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِۦٓ إِنِّى لَكُمْ نَذِيرٌ مُّبِينٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக நாம் நூஹை அவருடைய மக்களிடம் அனுப்பினோம். நிச்சயமாக நான் உங்களுக்கு ஒரு பகிரங்கமான எச்சரிப்பாளன் ஆவேன்.
Tamil Translation - Omar Sharifதிட்டவட்டமாக, நாம் நூஹை அவருடைய மக்களிடம் அனுப்பினோம். (அவர் கூறியதாவது:) “நிச்சயமாக நான் உங்களுக்கு ஒரு தெளிவான எச்சரிப்பாளர் ஆவேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi25. மெய்யாகவே நாம் ‘நூஹை' அவருடைய மக்களிடம் (நம் தூதராக) அனுப்பி வைத்தோம். (அவர், அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்.