مَثَلُ ٱلْفَرِيقَيْنِ كَٱلْأَعْمَىٰ وَٱلْأَصَمِّ وَٱلْبَصِيرِ وَٱلسَّمِيعِ هَلْ يَسْتَوِيَانِ مَثَلًا أَفَلَا تَذَكَّرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(இந்த) இரு பிரிவினரின் உதாரணம் குருடன், செவிடன் இன்னும் பார்ப்பவன், கேட்பவனைப் போன்றாகும். இருவரும் சமமாவார்களா? நீங்கள் (இந்த வேதத்தை சிந்தித்து) நல்லுபதேசம் பெற மாட்டீர்களா?
Tamil Translation - Omar Sharif(இந்த) இரு பிரிவினரின் உதாரணம் குருடன், செவிடன்; இன்னும், பார்ப்பவன், செவியுறுபவனைப் போன்றாகும். இரு பிரிவினர்களும் சமமாவார்களா? நீங்கள் (இந்த வேதத்தை சிந்தித்து) நல்லுபதேசம் பெற மாட்டீர்களா?
Tamil Translation - Abdulhamid Baqawi24. இவ்விரு (பிரிவினரில் ஒரு) பிரிவினர் குருடனையும், செவிடனையும் (போலிருக் கின்றனர். மற்றொரு பிரிவினர்) பார்வையுடையவனையும் கேட்கும் சக்தியுடையவனையும் ஒத்திருக்கின்றனர். இவ்விரு பிரிவினரும் சமமாவார்களா? (இந்த உதாரணத்தைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சி பெற வேண்டாமா?