caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Hud அத்தியாயம், வசனம் 112

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 52 · 11:112

فَٱسْتَقِمْ كَمَآ أُمِرْتَ وَمَن تَابَ مَعَكَ وَلَا تَطْغَوْا۟ إِنَّهُۥ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) நீர் ஏவப்பட்டது போன்றே, நீரும், (பாவத்தை விட்டுத்) திருந்தி (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி உம்முடன் இருப்பவர்களும் (நேர்வழியில்) நிலையாக இருங்கள். (மார்க்கத்திலும் மக்கள் விஷயங்களிலும்) வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அவன் நீங்கள் செய்பவற்றை உற்றுநோக்குபவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifஆக, (நபியே!) நீர் ஏவப்பட்டது போன்றே (நேரான வழியில் நிரந்தரமாக) நிலையாக, ஒழுங்காக இருப்பீராக! இன்னும், (பாவங்களை விட்டும்) திருந்தி, (நன்மைகளை செய்து) உம்முடன் சேர்ந்து அல்லாஹ்வின் பக்கம் திரும்பியவர்களும் (மார்க்கத்தில் நிரந்தரமாக) நிலையாக, ஒழுங்காக இருக்கவும்! இன்னும், (மார்க்கத்திலும் மக்கள் விஷயங்களிலும்) எல்லை மீறாதீர்கள். நிச்சயமாக அவன் நீங்கள் (அனைவரும்) செய்பவற்றை உற்றுநோக்குபவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi112. ஆகவே, (நபியே!) உமக்கு ஏவப்பட்டது போன்றே, நீரும் இணை வைத்து வணங்குவதிலிருந்து விலகி உம்முடன் இருப்பவரும் (நேரான வழியில்) உறுதியாக இருங்கள். (இதில்) சிறிதும் தவறி விடாதீர்கள். நிச்சயமாக அவன் உங்கள் செயலை உற்று நோக்குபவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70