فَقَالُوا۟ عَلَى ٱللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“அல்லாஹ்வின் மீதே நாங்கள் நம்பிக்கை வைத்தோம். எங்கள் இறைவா! அநியாயம்புரிகின்ற சமுதாயத்திற்கு ஒரு சோதனையாக எங்களை ஆக்கி விடாதே!” என்று கூறினார்கள்.
Tamil Translation - Omar Sharifஅதற்கு அவர்கள் (பிரார்த்தித்து) கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீதே நாங்கள் நம்பிக்கை வைத்து (அவனை மட்டுமே சார்ந்து) விட்டோம். எங்கள் இறைவா! அநியாயம் செய்கின்ற சமுதாயத்திற்கு சோதனையாக எங்களை ஆக்கி விடாதே! (எங்கள் மீது அவர்களை சாட்டி விடாதே!)”
Tamil Translation - Abdulhamid Baqawi85. அதற்கவர்கள், ‘‘(அவ்வாறே) அல்லாஹ்விடம் எங்கள் காரியங்கள் அனைத்தையும் ஒப்படைத்து விட்டோம். எங்கள் இறைவனே! நீ எங்களை அநியாயம் செய்யும் மக்களின் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிவிடாதே!'' என்று பிரார்த்தித்தார்கள்.