وَقَالَ مُوسَىٰ يَٰقَوْمِ إِن كُنتُمْ ءَامَنتُم بِٱللَّهِ فَعَلَيْهِ تَوَكَّلُوٓا۟ إِن كُنتُم مُّسْلِمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“என் சமுதாயமே! நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், நீங்கள் முஸ்லிம்களாக இருந்தால், அவன் மீதே நம்பிக்கை வையுங்கள்” என்று மூஸா கூறினார்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், மூஸா கூறினார்: “என் சமுதாயமே! நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், நீங்கள் (அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் பணிந்து கட்டுப்படக்கூடிய) முஸ்லிம்களாக இருந்தால், அவன் மீதே நம்பிக்கை வைத்து (அவனை மட்டுமே சார்ந்து) விடுங்கள்!”
Tamil Translation - Abdulhamid Baqawi84. மூஸா (தன் மக்களை நோக்கி) ‘‘என் மக்களே! நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வை நம்பிக்கைக் கொண்டு, உண்மையாகவே நீங்கள் அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிப்படுகிறவர்களாகவும் இருந்தால், முற்றிலும் அவனையே நம்பி (அவனிடமே உங்கள் காரியங்கள் அனைத்தையும் ஒப்படைத்து) விடுங்கள்'' என்று கூறினார்.