caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yunus அத்தியாயம், வசனம் 83

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 51 · 10:83

فَمَآ ءَامَنَ لِمُوسَىٰٓ إِلَّا ذُرِّيَّةٌ مِّن قَوْمِهِۦ عَلَىٰ خَوْفٍ مِّن فِرْعَوْنَ وَمَلَإِي۟هِمْ أَن يَفْتِنَهُمْ وَإِنَّ فِرْعَوْنَ لَعَالٍ فِى ٱلْأَرْضِ وَإِنَّهُۥ لَمِنَ ٱلْمُسْرِفِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதங்களை ஃபிர்அவ்னும், அவனுடைய முக்கிய பிரமுகர்களும் துன்புறுத்துவதை பயந்து மூஸாவை அவரின் சமுதாயத்தில் ஒரு (சில) சந்ததியினரைத் தவிர (மற்றவர்கள்) நம்பிக்கை கொள்ளவில்லை. நிச்சயமாக ஃபிர்அவ்ன் பூமியில் ஒரு சர்வாதிகாரி (அடக்கி ஆளும் வம்பன்) ஆவான். இன்னும் நிச்சயமாக அவன் வரம்பு மீறக்கூடியவர்களில் இருந்தான்.
Tamil Translation - Omar Sharifஆக, ஃபிர்அவ்னும், அவனுடைய முக்கிய பிரமுகர்களும் தங்களை துன்புறுத்துவார்கள் என்பதை பயந்து மூஸாவை அவரின் சமுதாயத்திலிருந்து ஒரு (சில) சந்ததியினரைத் தவிர (அதிமானவர்கள்) நம்பிக்கை கொள்ளவில்லை. நிச்சயமாக ஃபிர்அவ்ன் பூமியில் சர்வாதிகாரியாக (கொடுங்கோலனாக) இருந்தான். இன்னும், நிச்சயமாக அவன் (நிராகரிப்பிலும் விஷமத்திலும்) எல்லை மீறி செல்பவர்களில் இருந்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi83. (இதைக் கண்ணுற்ற பின்னரும்) மூஸாவை அவர் இனத்தவரில் சிலர்தான் நம்பிக்கை கொண்டனர். அவர்களும் தங்களை ஃபிர்அவ்னும், அவனுடைய இனத்தவர்களும் துன்புறுத்துவார்களோ என்று பயந்து கொண்டே இருந்தனர். ஏனென்றால், நிச்சயமாக ஃபிர்அவ்ன் அந்த பூமியில் மிகச் சக்தி வாய்ந்தவனாக இருந்தான். நிச்சயமாக அவன் வரம்பு மீறி(க் கொடுமை செய்பவர்)களில் இருந்தான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70