قُلْ بِفَضْلِ ٱللَّهِ وَبِرَحْمَتِهِۦ فَبِذَٰلِكَ فَلْيَفْرَحُوا۟ هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“(இந்த குர்ஆன்) அல்லாஹ்வின் அருளைக் கொண்டும் அவனுடைய கருணையைக் கொண்டும் (இறக்கப்பட்டது). ஆகவே, இதைக் கொண்டே அவர்கள் மகிழ்ச்சியடையட்டும். இது அவர்கள் சேகரிப்பவற்றை விட மிக மேலானது” என்று (நபியே) கூறுவீராக!
Tamil Translation - Omar Sharif(நபியே) கூறுவீராக! “(இந்தக் குர்ஆன்) அல்லாஹ்வின் அருளினாலும் அவனுடைய கருணையினாலும் (உங்களுக்கு) இறக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இ(தை நம்பிக்கைக் கொண்டு, இதை பின்பற்றி நடப்ப)தன் மூலமே அவர்கள் மகிழ்ச்சியடையட்டும். இது அவர்கள் சேகரி(த்து சேமித்து வை)க்கின்ற (உலக செல்வத்)தை விட மிக மேலானதாகும்.”
Tamil Translation - Abdulhamid Baqawi58. ‘‘(இதை) அல்லாஹ்வின் அருளாகவும் அன்பாகவும் (பாவித்து) இதற்காக அவர்கள் மகிழ்ச்சியடையட்டும். இது அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் (மற்ற பொருள்கள்) அனைத்தையும் விட மிக்க மேலானது'' என்றும் (நபியே!) கூறுவீராக.