يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدْ جَآءَتْكُم مَّوْعِظَةٌ مِّن رَّبِّكُمْ وَشِفَآءٌ لِّمَا فِى ٱلصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசமும், நெஞ்சங்களிலுள்ளவற்றிற்கு (குணப்படுத்தும்) மருந்தும் நேர்வழியும், நம்பிக்கையாளர்களுக்கு அருளும் வந்துவிட்டன.
Tamil Translation - Omar Sharifமனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உபதேசமும், நெஞ்சங்களிலுள்ளவற்றை குணப்படுத்தும் மருந்தும் நேர்வழியும், (குறிப்பாக இந்த வேதத்தை பின்பற்றி நடக்கின்ற) நம்பிக்கையாளர்களுக்கு (இறைவனின்) கருணையும் (அருளும்) வந்துவிட்டன.
Tamil Translation - Abdulhamid Baqawi57. மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்து நல்லுபதேசமும் உங்கள் உள்ளங்களிலுள்ள நோய்களை குணப்படுத்தக் கூடியதும், (அது) நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு நேர்வழி காட்டியும், இறை அருளும் வந்துள்ளன.