قُل لَّآ أَمْلِكُ لِنَفْسِى ضَرًّا وَلَا نَفْعًا إِلَّا مَا شَآءَ ٱللَّهُ لِكُلِّ أُمَّةٍ أَجَلٌ إِذَا جَآءَ أَجَلُهُمْ فَلَا يَسْتَـْٔخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அதற்கு நபியே!) கூறுவீராக! “அல்லாஹ் நாடியதைத் தவிர (எவ்வித) தீமைக்கோ நன்மைக்கோ நான் எனக்கு உரிமை பெறமாட்டேன். ஒவ்வொரு வகுப்பாருக்கும் ஒரு (குறிப்பிட்ட) தவணையுண்டு. அவர்களுடைய தவணை வந்தால் ஒரு சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.”
Tamil Translation - Omar Sharif(அதற்கு நபியே!) கூறுவீராக! “அல்லாஹ் நாடியதைத் தவிர (எவ்வித) தீமைக்கோ நன்மைக்கோ நான் எனக்கு உரிமை பெறமாட்டேன். ஒவ்வொரு வகுப்பாருக்கும் ஒரு (குறிப்பிட்ட) தவணை உண்டு. அவர்களுடைய தவணை வந்தால் (அதிலிருந்து) சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள்; இன்னும், முந்தவும் மாட்டார்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi49. (அதற்கு நபியே!) கூறுவீராக: ‘‘அல்லாஹ் நாடியதைத் தவிர ஒரு நன்மையோ தீமையோ நான் எனக்கே தேடிக்கொள்ள சக்தியற்றவன். ஒவ்வொரு வகுப்பாருக்கும் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. அவர்களுடைய தவணை வரும் சமயத்தில் ஒரு நாழிகை கூட பிந்த மாட்டார்கள்; முந்தக்கூட மாட்டார்கள்.'' (அத்தவணையில் அவர்கள் காரியம் முடிவு பெற்றுவிடும்).