فَهَلْ يَنتَظِرُونَ إِلَّا مِثْلَ أَيَّامِ ٱلَّذِينَ خَلَوْا۟ مِن قَبْلِهِمْ قُلْ فَٱنتَظِرُوٓا۟ إِنِّى مَعَكُم مِّنَ ٱلْمُنتَظِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதங்களுக்கு முன் சென்றவர்களின் நாள்களைப் போன்றதைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? நீங்கள் எதிர்பாருங்கள்; நிச்சயமாக நான் உங்களுடன் எதிர்பார்ப்பவர்களில் உள்ளவன் என்று (நபியே) கூறுவீராக.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்கள் தங்களுக்கு முன் சென்றவர்களின் நாள்களைப் போன்றதைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? “நீங்கள் (உங்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் தீர்ப்பை) எதிர்பாருங்கள்; நிச்சயமாக நான் உங்களுடன் எதிர்பார்ப்பவர்களில் இருக்கிறேன்” என்று (நபியே) கூறுவீராக.
Tamil Translation - Abdulhamid Baqawi102. (நபியே!) அவர்கள் தங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தைப் போன்றதேயன்றி (வேறு எதையும்) எதிர்பார்க்கின்றனரா? (எனவே, அவர்களை நோக்கி ‘‘அத்தகைய கஷ்டகாலம்தான் உங்களுக்கும் வர இருக்கிறது.) ஆகவே, (அதை) நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நானும் (அது உங்களுக்கு வருவதை) உங்களுடன் எதிர்பார்க்கிறேன்'' என்று கூறுவீராக.