caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 8

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:8

كَيْفَ وَإِن يَظْهَرُوا۟ عَلَيْكُمْ لَا يَرْقُبُوا۟ فِيكُمْ إِلًّا وَلَا ذِمَّةً يُرْضُونَكُم بِأَفْوَٰهِهِمْ وَتَأْبَىٰ قُلُوبُهُمْ وَأَكْثَرُهُمْ فَٰسِقُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎவ்வாறு (அவர்களை நம்ப முடியும்)? அவர்கள் உங்களை வெற்றி கொண்டால் உங்களுடன் (தங்களுக்குள்ள) உறவையும் ஒப்பந்தத்தையும் பொருட்படுத்தமாட்டார்கள். தங்கள் வாய் (வார்த்தை)களால் உங்களைத் திருப்திபடுத்துகின்றனர்; அவர்களுடைய உள்ளங்கள் (உங்களை) மறுக்கின்றன (வெறுக்கின்றன). அவர்களில் அதிகமானோர் பாவிகள் ஆவர்.
Tamil Translation - Omar Sharifஎவ்வாறு (அவர்களை நம்ப முடியும்)? அவர்கள் உங்களை வெற்றி கொண்டால் உங்களுடன் (அவர்களுக்கு இருக்கின்ற வமிச, குடும்ப இரத்த) உறவையும் (அவர்கள் உங்களுடன் செய்த) உடன்படிக்கையையும் பொருட்படுத்தமாட்டார்கள். தங்கள் வாய் (வார்த்தை)களால் உங்களைத் திருப்திப்படுத்துகிறார்கள்; இன்னும், அவர்களுடைய உள்ளங்கள் (உங்களை ஏற்க) மறுக்கின்றன. அவர்களில் அதிகமானோர் (சட்டங்களை மீறுகின்ற) பாவிகள் ஆவர்.
Tamil Translation - Abdulhamid Baqawi8. (எனினும் அவர்களின் உடன்படிக்கையையும்) எவ்வாறு (நம்ப முடியும்)? அவர்கள் உங்களை வெற்றி கொண்டாலோ (நீங்கள் அவர்களுக்கு) உறவினர்கள் என்பதையும் (உங்களுக்கும் அவர்களுக்கும் இடையிலுள்ள) உடன்படிக்கையையும் பொருட்படுத்துவதேயில்லை. தங்கள் வார்த்தைகளைக் கொண்டு (மட்டும்) உங்களைத் திருப்திபடுத்துகின்றனர்; ஆனால், அவர்களுடைய உள்ளங்களோ (உங்களிடமிருந்து) விலகிக் கொள்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் பாவிகளே ஆவர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70