وَإِنْ أَحَدٌ مِّنَ ٱلْمُشْرِكِينَ ٱسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّىٰ يَسْمَعَ كَلَٰمَ ٱللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُۥ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) இணைவைப்பவர்களில் ஒருவர் உம்மிடம் பாதுகாப்புத் தேடினால், அல்லாஹ்வின் பேச்சை அவர் செவியுறும் வரை அவருக்கு பாதுகாப்பு அளிப்பீராக! பிறகு அவரை அவருடைய பாதுகாப்பான இடத்திற்குச் சேர்த்து விடுவீராக! அதற்குக் காரணம், நிச்சயமாக அவர்கள் அறியாத சமுதாயம் ஆகும்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (நபியே!) அந்த இணைவைப்பவர்களில் ஒருவர் உம்மிடம் பாதுகாப்புத் தேடினால், அல்லாஹ்வின் பேச்சை அவர் செவியுறும் வரை அவருக்கு பாதுகாப்பு அளிப்பீராக! பிறகு அவரை அவருடைய பாதுகாப்பான இடத்திற்குச் சேர்த்து விடுவீராக! அதற்குக் காரணம், நிச்சயமாக அவர்கள் அறியாத மக்கள் ஆவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi6. (நபியே!) இணைவைத்து வணங்குபவர்களில் எவனும் உம்மிடம் பாதுகாப்பைக் கோரினால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவன் செவியுறும்வரை அவனுக்கு பாதுகாப்பு அளிப்பீராக. (அவன் அதை செவியுற்றும் நம்பிக்கை கொள்ளாவிட்டால்) அவனை அவனுக்கு பாதுகாப்புள்ள (வேறு) இடத்திற்கு அனுப்பிவிடுவீராக! ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அறிவில்லாத மக்கள் ஆவர்.