إِلَّا ٱلَّذِينَ عَٰهَدتُّم مِّنَ ٱلْمُشْرِكِينَ ثُمَّ لَمْ يَنقُصُوكُمْ شَيْـًٔا وَلَمْ يُظَٰهِرُوا۟ عَلَيْكُمْ أَحَدًا فَأَتِمُّوٓا۟ إِلَيْهِمْ عَهْدَهُمْ إِلَىٰ مُدَّتِهِمْ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُتَّقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(எனினும்,) இணைவைப்பவர்களில் நீங்கள் உடன்படிக்கை செய்து பிறகு (அதில்) அவர்கள் உங்களுக்கு எதையும் குறைக்காமலும், உங்களுக்கு எதிராக ஒருவருக்கும் உதவாமலும் இருந்தவர்களைத் தவிர. அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களுடைய தவணை (முடியும்) வரை முழுமைப்படுத்துங்கள். நிச்சயமாக அல்லாஹ் (அவனை) அஞ்சுபவர்களை நேசிக்கிறான்.
Tamil Translation - Omar Sharif(எனினும்,) இணைவைப்பவர்களில் எவர்களிடம் நீங்கள் உடன்படிக்கை செய்து, பிறகு அவர்கள் (உடன்படிக்கையின் அம்சங்களில்) எதையும் உங்களுக்கு குறைக்காமலும், உங்களுக்கு எதிராக (எதிரிகளில்) ஒருவருக்கும் உதவாமலும் இருந்தார்களோ அவர்களைத் தவிர. ஆக, அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களுடைய (உடன்படிக்கையின்) தவணை (முடியும்) வரை முழுமைப்படுத்துங்கள். நிச்சயமாக அல்லாஹ், தன்னை அஞ்சுபவர்கள் மீது அன்பு வைக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi4. ஆயினும், நீங்கள் உடன்படிக்கை செய்துகொண்ட இந்த இணைவைத்து வணங்குபவர்களில் எவர்கள் (தங்கள் உடன்படிக்கையில்) எதையும் உங்களுக்குக் குறைவு செய்யாதும், உங்களுக்கு எதிராக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றனரோ அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அதன் தவணை வரை (ஒரு குறைவுமின்றி) முழுமைப்படுத்தி வையுங்கள். நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுடையவர்களை நேசிக்கிறான்.