caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 2

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:2

فَسِيحُوا۟ فِى ٱلْأَرْضِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَٱعْلَمُوٓا۟ أَنَّكُمْ غَيْرُ مُعْجِزِى ٱللَّهِ وَأَنَّ ٱللَّهَ مُخْزِى ٱلْكَٰفِرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, (இணைவைப்பவர்களே) “நீங்கள் நான்கு மாதங்கள் பூமியில் (சுதந்திரமாக) சுற்றலாம். நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வை பலவீனப்படுத்துபவர்கள் அல்லர் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை இழிவுபடுத்துபவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.”
Tamil Translation - Omar Sharifஆகவே, (இணைவைப்பவர்களே) “நீங்கள் நான்கு மாதங்கள் பூமியில் (சுதந்திரமாக) சுற்றலாம். இன்னும், “நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வை பலவீனப்படுத்துபவர்கள் அல்லர் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களை இழிவுபடுத்துவான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi2. ஆகவே, (இணைவைத்து வணங்குபவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (இன்றிலிருந்து) நான்கு மாதங்கள் வரை (மக்காவின்) பூமியில் (எங்கும்) சுற்றித் திரியலாம். நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க மாட்டீர்கள் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை இழிவுபடுத்துவான் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்'' (என்று நபியே! நீர் கூறுவீராக.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70