بَرَآءَةٌ مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦٓ إِلَى ٱلَّذِينَ عَٰهَدتُّم مِّنَ ٱلْمُشْرِكِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version‘பராஆ’ விலகுதல் (எனும் அறிவிப்பு) அல்லாஹ்வின் புறத்திலிருந்தும் அவனுடைய தூதர் புறத்திலிருந்தும் இணைவைப்பவர்களில் நீங்கள் உடன்படிக்கை செய்தவர்களுக்கு (அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அந்த இணைவைப்பவர்களிலிருந்து விலகிக்கொள்கின்றனர் என்று அறிவிக்கப்படுகிறது).
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் நீங்கள் உடன்படிக்கை செய்த இணைவைப்பாளர்களை நோக்கி அறிவிக்கப்படுவதாவது: “(அல்லாஹ்வும் ரஸூலும் இணைவைப்பாளர்களின் உடன்படிக்கையிலிருந்து) விலகி விடுகிறார்கள்” என்று.
Tamil Translation - Abdulhamid Baqawi1. (நம்பிக்கையாளர்களே!) இணைவைத்து வணங்குபவர்களில் எவர்களிடம் நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தீர்களோ அவர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர்!