فَكُلُوا۟ مِمَّا غَنِمْتُمْ حَلَٰلًا طَيِّبًا وَٱتَّقُوا۟ ٱللَّهَ إِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, நீங்கள் வென்ற (செல்வத்)தில் நல்ல ஆகுமானதை புசியுங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.
Tamil Translation - Omar Sharifஆகவே, நீங்கள் எதை (போரில்) வென்று சொந்தமாக்கினீர்களோ அந்த ஆகுமான நல்லதை புசியுங்கள். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi69. ஆகவே, (எதிரிகளிடமிருந்து) உங்களுக்குக் கிடைத்தவற்றை, நல்ல ஆகுமான பொருள்களாகவே (கருதிப்) புசியுங்கள். (இனி இத்தகைய விஷயங்களில்) அல்லாஹ் வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையாளன் ஆவான்.